Newsமனித ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

மனித ரோபோவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

-

அமெரிக்காவில் அனைத்து பணிகளையும் செய்யும் மனித ரோபோக்களை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மனிதர்களுக்கு சிறந்த நண்பராக இருக்கும் வகையிலான ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.

அவரது நிறுவனத்தின் இந்த ரோபோக்கள் வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மனித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், “இந்த மனித ரோபோக்களால் நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடனமாட முடியும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடியும். நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்ல முடியும்.

மேலும் தோட்ட வேலைகள், வீட்டை சுத்தம் செய்தல், கடைக்கு சென்று சாமான்கள் வாங்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்யும். மனிதர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும் இந்த ரோபோவின் விலை 20,000 முதல் 30,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...