சிட்னியின் இரண்டு முக்கிய சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன.
அதன்படி, கரையோரப் பகுதியில் தார் போன்ற ஒன்று காணப்பட்டதையடுத்து, புகழ்பெற்ற இரண்டு கடற்கரைகளான போண்டி, தமராம மற்றும் ப்ரோண்டே கடற்கரைகளை பொதுமக்களின் பார்வைக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளை ஆய்வு செய்த சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, அது தொடர்பான கடற்கரைகளில் தார் போன்ற சில பொருட்கள் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளை உடனடியாக பொதுமக்களுக்கு திறக்க வேண்டாம் என தெரிவித்திருந்தது.
அதன்படி மக்களின் பாதுகாப்பு கருதி கடற்கரைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணிகள் முடியும் வரை சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள கடற்கரைகள் மூடப்படும் என மேயர் டிலான் பார்க்கர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை மற்றும் துப்புரவுத் துறைகளுடன் இணைந்து கவுன்சில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.