Cinemaமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த "அமரன்"!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த “அமரன்”!

-

ராணுவத்தை மையமாக வைத்து 90களில்தான் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் சில பல படங்கள் வந்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் அதிகம் வந்ததில்லை. எப்போதாவது ஒரு முறைதான் வந்து கொண்டிருந்தன.

இந்த ‘அமரன்’ திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அவரது திறமையை, போராட்டத்தை, தியாகத்தை வெளிப்படுத்தும் நிறைவான ஒரு படமாக வந்துள்ளது.

கண்காணிப்பு இணையதளமான Sacnilk தகவலின்படி, தீபாவளி பண்டியை முன்னிட்டு ஒக்டோபர் 31 அன்று வெளியான அமரன், முதல் நாளில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 21 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமரன் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலகளாவிய ரீதியில் 35 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த ஓப்பனிங் ஆகும். தமிழ் நாட்டில் இந்திய மதிப்புப்படி ரூ.17 கோடியும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் முறையே ரூ.40 இலட்சம், ரூ.15 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வசூலித்துள்ளது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதனால், அமரன் இந்த ஆண்டின் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து தமிழ்ப் படங்களில் இடம்பிடித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்துள்ளது.

மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...