Newsநாய்களை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை

நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை

-

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கனடாவை சேர்ந்த “BONK” மற்றும் “கொரிய கே9 ஆர் அமைப்பு” (KK9R) இணைந்து, இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மீட்கப்படும் பப்பிகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், கடந்த செப்டெம்பர் 5ஆம் திகதி, தென்கொரியாவில் உள்ள கோசன் நகரில், கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியது.

இதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 தெருநாய்களை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். இதற்கு முன்பு 36 நாய்களுடன் வாக்கிங் சென்றதே சாதனையாக இருந்தது.

இதை முறியடித்த பெருமைக்கு சொந்தக்காரரான மிட்செல் ரூடி தன்னுடன் வாக்கிங் வந்த நாய்கள் அனைத்தும் நல்ல உடல் திறன் கொண்டவை என்கிறார். இந்நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கலாமென KK9R அமைப்பு தெரிவித்துள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இவரின் வீடியோவை பார்த்து “இது அல்லவோ சாதனை” என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...