விக்டோரியாவில் Hay Fever மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் புல் மகரந்த அளவு அதிகரிப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் மெல்பேர்ணில் புல் மகரந்தத்தின் அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியதால், Hay Fever-கான மருந்துகளை பலர் உட்கொள்ள வேண்டியிருந்தது.
கிழக்கு கிப்ஸ்லாந்தில் ஆஸ்துமாவின் ஆபத்து அதிகமாக இருப்பதாக VicEmergency கூறியுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் புல் மகரந்த அதிகரிப்பு நிலை பல நாட்களுக்கு நீடிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏற்கனவே ஆஸ்துமா அல்லது Hay Fever இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமாகும்.
Hay Fever மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.