2025 ஆம் ஆண்டு வரை, ஆஸ்திரேலியாவில் உள்ள பல பெரிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களுக்கான பாடநெறிக் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கு கல்வி நோக்கத்திற்காக பிரவேசிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மெல்போர்ன் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் ஆகியவை 2025ஆம் ஆண்டு கல்வியாண்டில் சர்வதேச மாணவர்களின் படிப்புக் கட்டணத்தை 7% உயர்த்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தேசிய திட்டமிடல் செயல்முறையின் கீழ், 270,000 சர்வதேச மாணவர்களை மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய மாணவர் வீசா கட்டணத்தை 710 டொலர்களில் இருந்து 1600 டொலர்களாக உயர்த்தியதன் பின்னணியிலேயே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதும் விசேட அம்சமாகும்.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் உயர்கல்விக்காக வரும் சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைச் செலவில் அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.