NSW முழுவதும் உள்ள உணவகங்களில் விற்கப்படும் பிரபலமான காலை உணவுப் பொருள் திரும்பப் பெறப்பட்டது.
Tropical Brazil Pty Ltd தயாரிக்கும் இந்த Acai பொருட்களை சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்று ஆஸ்திரேலியாவின் உணவு தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
Salmonella பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவு உண்பதற்கு தகுதியற்றது என்று கூறப்படுகிறது.
இவ்வாறு திரும்ப அழைக்கப்பட்ட பொருட்களில்
Acai Cream 20g , Granola 70g/200ml
Acai Guarana 1.7kg/2L, 3.6kg, 595g/700ml
தயாரிப்புகள் அடங்கும்:
இரண்டு தயாரிப்புகளும் Lot 302 எனக் குறிக்கப்பட்டுள்ளது மற்றும் காலாவதி திகதி ஆகஸ்ட் 1, 2026 ஆகும்.
ஏற்கனவே இந்த பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இருந்தால், பொருட்களை வாங்கிய கடையில் ஒப்படைத்து உரிய பணத்தை வசூலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.