எதிர்காலத்தில் HECS-HELP அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய ஆஸ்திரேலிய மத்திய அரசு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் நிலை கல்வி தரநிலைகள் மற்றும் தர நிர்ணய முகவரகத்தில் (TEQSA) நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர், இந்த ஆண்டு இறுதிக்குள் பல்கலைக்கழக நிதி சீர்திருத்தம் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
HECS முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பல்கலைக்கழக மாணவர்கள் பட்டப்படிப்பை தொடரும் போது அதிக செலவுகளை செலுத்த வேண்டியிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் பட்டத்திற்கான செலவில் 24% செலுத்தினர், மேலும் 1990 களின் இறுதியில், அந்த எண்ணிக்கை 36% ஆக உயர்ந்தது.
ஆனால் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களினால் இந்த எண்ணிக்கை 45% ஆக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டை அறிவிக்கும் முன் HECS-HELP கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்த மத்திய அரசின் நடவடிக்கை, மாணவர் கடன் பிரச்னை அடுத்த மத்திய தேர்தலில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது.