விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கழுத்தின் பின்புறம் மற்றும் கைகளில் பச்சை குத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
முன்னர் அவர்கள் தமது கடமைகளின் போது உத்தியோகபூர்வ ஆடைகளால் மறைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே பச்சை குத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதிகளின் மூலம், பச்சை குத்தியதால் நேர்காணலில் இருந்து நிராகரிக்கப்பட்ட 86 விண்ணப்பதாரர்களை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மாத்திரம் பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவையில் சேர விண்ணப்பித்த 135 பரீட்சார்த்திகள் பச்சை குத்தியதன் காரணமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநில காவல்துறை சேவையில் தற்போது 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த புதிய சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், முகம், கழுத்தின் முன்பகுதி மற்றும் தலையில் பச்சை குத்துவதற்கு இனி அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.