Newsலெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

-

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பெய்ரூட் விமான நிலையத்தின் அருகே இஸ்ரேல் இராணுவம் இன்று (நவ. 14) நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் தரமட்டமாகின.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே,

ஹிஸ்புல்லா குழுக்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அருகே இருப்பவர்கள் கவனத்திற்கு, கூடிய விரைவில் அப்பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எனக் குறிப்பிட்டு, வரைபடத்தில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பெய்ரூட் விமான நிலையம் அருகே ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.

ஓடுபாதைகளில் விமானங்கள் சென்றுக்கொண்டிருக்கும்போதே ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதில் விமானங்கள் அவசரமாகத் திருப்பப்பட்டன. சுற்றியிருந்த கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாகின.

பெய்ரூட்டில் இஸ்ரேல் எல்லையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவிலுள்ள கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மக்களுக்கு எதிரான ஹிஸ்புல்லாக்களின் மறைமுகத் தாக்குதலைத் தகர்க்கும் நோக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் இதனைச் செய்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...