Newsகிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

-

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின் முன்னணி கொயினான Bitcoin மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டொலர் மதிப்பில் 88,817 டொலர்களை எட்டி Crypto சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 இலட்சம் ஆகும். 1,00,000 டொலரை நெருங்கிக்கொண்டிருக்கும் Bitcoin மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

Cryptocurrency-யை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் ட்ரம்ப் சொன்னதே Bitcoin வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி Bitcoin ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 ட்ரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 ட்ரில்லியன் டொலரை தற்போது Bitcoin சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.

Latest news

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...