ஆஸ்திரேலியர்களிடம் மத்திய அரசு சட்டவிரோதமாக பலகோடி வர்த்தக கட்டணமாக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.
அரசு பரிவர்த்தனைகளுக்கு பல பில்லியன் டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத வர்த்தக கட்டணத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா விண்ணப்பங்கள் மற்றும் வரிக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஜான் ஹோவர்ட் அரசில் இருந்தே வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபரில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதே போன்றதொரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.அங்கு மாநில அரசு 8 ஆண்டுகளாக 144 மில்லியன் டாலர்களை சட்டவிரோதமாக வசூலித்தது தெரியவந்தது.
இதன் காரணமாக இப்பிரச்னையை ஆய்வு செய்ய மத்திய அரசு அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு, தணிக்கை சவால்கள் காரணமாக, கட்டணம் வசூலித்த நபர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் திட்டம் இல்லை என தெரியவந்துள்ளது.
ஜனவரி 1, 2025 முதல் டெபிட் கார்டு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதி அமைச்சர் கேத்தி கல்லாகர் தெரிவித்தார்.