Newsஇந்திய விமான நிறுவனங்களுக்கு சுமார் 1,000 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!

இந்திய விமான நிறுவனங்களுக்கு சுமார் 1,000 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!

-

இந்தியாவின் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக அந்நாட்டின் துணை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது 2023 இல் பெறப்பட்ட அச்சுறுத்தல்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்று அமைச்சர் முரளிதர் மொஹோல் கூறியுள்ளார்.

இந்த வெடி குண்டு மிரட்டல்களில் 500 க்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் ஒக்டோபர் இறுதி இரண்டு வாரங்களில் பெறப்பட்டன.

போலி அச்சுறுத்தல்களின் வியத்தகு அதிகரிப்பு, விமான அட்டவணையில் அழிவை ஏற்படுத்தியது, இதனால் சேவைகளில் பரவலான இடையூறு ஏற்பட்டது.

இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் 256 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2014 – 2017 க்கு இடையில் இந்திய அதிகாரிகள் விமான நிலையங்களில் வெறும் 120 போலி வெடிகுண்டு எச்சரிக்கைகளை மாத்திரம் பதிவு செய்திருந்தனர்.

இவற்றில் 50 சதவீதமானவை நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களான டெல்லி மற்றும் மும்பைக்கு விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் வட்டி விகிதக் குறைப்பு

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பால் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் சோகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Macquarie, NAB, மற்றும் Bank of Queensland (BOQ) உள்ளிட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...