விக்டோரியா மாநிலத்திற்குள் குழந்தைகள் பாதுகாப்பு பணிக்குழுவை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2017 க்கு இடையில் குடும்ப வன்முறையால் நான்கு மரணங்கள் ஏற்பட்டதாக விக்டோரியா மாநில மரண விசாரணை அதிகாரி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 மாதம் முதல் 15 வயது வரை உள்ள இந்த நான்கு குழந்தைகளின் மரணத்தின் மூலம் அரசு குழந்தை காப்பீட்டு திட்டத்தில் பல பாரிய பிரச்சனைகள் இருப்பது அரசு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், விக்டோரியாவில் உள்ள குடும்ப வன்முறை இறப்புகளின் மறுஆய்வு, இந்த மரணங்கள் குறித்து பொது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் விக்டோரியா மாநில மரண விசாரணை அதிகாரி ஜோன் கேன் கூறுகையில், இந்த சம்பவங்களில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க தவறியுள்ளது.
இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் விக்டோரியாவில் குழந்தைகள் பாதுகாப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய சீர்திருத்தங்கள் குறித்து பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.