எதிர்வரும் நாட்களில் அவுஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், நியூ சவுத் வேல்ஸ், ACT, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நிலைகள் ஏற்படும் என்றும், நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லைக்கு அருகில் உள்ள Wangaratta, Albury – Wodonga மற்றும் Mallacoota போன்ற பகுதிகளில் கடுமையான வெப்ப நிலைகள் ஏற்படக்கூடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை மெல்பேர்ணில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.