ஆஸ்திரேலியாவில் சிகரெட் விலை உயர்வால், வயதான ஆஸ்திரேலியர்கள் கஞ்சா பக்கம் திரும்புவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியர்களை புகைபிடிப்பதை நிறுத்த ஊக்குவிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு புகையிலை வரியை உயர்த்தி வருவதாக நம்பப்படுகிறது.
2010 முதல் 2019 வரையிலான ஆஸ்திரேலிய தேசிய மருந்து மூலோபாய குடும்பக் கணக்கெடுப்பின் தரவு, கர்டின் பல்கலைக்கழகத்தின் கணக்கியல், பொருளாதாரம் மற்றும் நிதியியல் பள்ளியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
100,000 ஆஸ்திரேலியர்களின் வாங்கும் பழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 50 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் சிகரெட் விலை உயரும்போது கஞ்சா பாவனைக்கு திரும்புவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட 68,000 ஆஸ்திரேலியர்கள் புகையிலையின் விலை 10% உயர்ந்தால் கஞ்சாவைப் பயன்படுத்தத் தொடங்குவோம் என்று கூறியுள்ளனர்.