Sportsவீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளர்

-

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பெயரில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் பயிற்சியாளர் ஒருவரை அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் கட்டாய விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

பையத்லட்டுகள் பலர் அளித்த குற்றச்சாட்டை விசாரிக்க, அமெரிக்க பையத்லான் உறுப்பினர்களுக்கு அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் மின்னஞ்சல் அனுப்பியது. மின்னஞ்சல் செய்தியில், பயிற்சியாளர் ஒருவர் கட்டாய விடுமுறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், புகார் அளித்த வீரர்களின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பயிற்சியாளரின் பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. விசாரணை நடக்கும்போது கூடுதல் விhரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் ஆணையம் (யு.எஸ்.ஓ.பி.சி) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த நிலையில், பயிற்சியாளர் கேரி கோலியண்டர் மீது வில் வீராங்கனை கிரேஸ் பௌடோட் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தனது 15ஆவது வயதில் இருந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக கேரி மீது கிரேஸ் குற்றம் சாட்டியுள்ளார். கிரேஸ், தனது 18 ஆவது வயதில் பாலியல் துன்புறுத்தலை

எதிர்த்தபோதும், அவருக்கு கேரி மிரட்டல் விடுத்துள்ளார். தனது பையத்லான் கனவு பாழாகி விடும் என்ற அச்சத்துடனேயே கிரேஸ் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிரேஸ் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதை அறிந்த வைத்தியர், கிரேஸுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்துமாறு கேரியிடம் கூறியுள்ளார். இருப்பினும், மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கிரேஸ், 2010ஆம் ஆண்டு, ஒக்டோபரில் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்த சக விளையாட்டு வீரரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கிரேஸ் காப்பாற்றப்பட்டார்.

அடுத்த நாளிலேயே, கேரி தனது பதவியை இராஜிநாமா செய்தார். இருப்பினும், 2016ஆம் ஆண்டில், நோர்டிக் பனிச்சறுக்கு உயர் செயல்திறன் இணை இயக்குநராக அமெரிக்க பராலிம்பிக் அணியால் பணியமர்த்தப்பட்டார். பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ஒலிம்பிக் வீரர் ஜோன் ரெய்ட் சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பல விளையாட்டு வீராங்கனைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

Latest news

சூப்பர் மார்கெட்டில் கீரை வாங்கிய ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான கீரை வகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் E coli எனும் பாக்டீரியா அடையாளம் காணப்பட்டுள்ளதே...

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் கலவரம்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்த இரண்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். Carlton மற்றும் Collingwood போட்டியின் போது நேற்று இரவு சுமார்...

2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மெல்பேர்ண் வீட்டு விலைகளின் நிலவரம்

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வீட்டு வாடகைகள் சாதனை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு வாடகைகள் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆண்டின் முதல்...