தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் பல அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
காட்டுத் தீ நிலைமை கட்டுக்கடங்காமல் பரவி வருவதோடு, இதுவரை 34000 ஹெக்டேயர் நாசமாகியுள்ளதுடன், இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் காட்டுத் தீ நிலைமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, தற்போது Grampiand தேசிய பூங்கா பகுதியில் இருந்து வடக்கில் இருந்து Halls Gap நோக்கி காட்டுத் தீ நிலைமை நகர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, Belfield, Belfield Settlement, Flat Rock Crossing, Fyans Creek, Gampians Junction மற்றும் Halls Gap உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்பவர்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே அந்த பகுதிகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்களை அந்த பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.