சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளுக்கு மத்தியில் பெறுமதியான பொருட்களை தேடும் நபர் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான லியோனார்டோ அர்பானோ சிட்னியின் குப்பைத் தொட்டிகளில் கலை, கணினிகள், ஐபோன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பெறுமதியான பொருட்களை லியனார்டோ சரிசெய்து பின்னர் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.
அதன் மூலம் கிடைக்கும் பணம் வாடகை செலவுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை, குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பயனுள்ள பொருட்களை லியொனார்டோ தனது வீட்டில் பாவனைக்கு பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் தூக்கி எறியும் பொருட்களைச் சரிபார்க்க மாட்டார்கள் என்று லியோனார்டோ உர்பானோ கூறியுள்ளார்.