Boxing Day Test போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நேரலையில் காண நேற்று அதிக பார்வையாளர்கள் MCGக்கு வந்துள்ளனர்.
அதன்படி நேற்று (28) MCGக்கு 77,418 பார்வையாளர்கள் வருகை தந்தமையும் சிறப்பம்சமாகும்.
இதேவேளை, Boxing Day Test போட்டியின் முதல் மூன்று நாட்களில் போட்டியை நேரடியாக காண 249,807 பார்வையாளர்கள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் இரண்டு நாள் ஆட்டத்தில் பார்வையாளர்களின் பங்கேற்புடன் MCGயில் இந்த பாக்சிங் டே போட்டி சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, 1936-37 காலகட்டத்தைச் சேர்ந்த MCG பார்வையாளர்கள் பங்கேற்றது தொடர்பான சாதனை இந்த Boxing Day Test போட்டியில் புதுப்பிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.