மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல சூறாவளி நிலை இன்று வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் மெக்கரிங் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூறாவளிக்கு சீன் என பெயரிடப்பட்டுள்ளதுடன், இன்று காலை நிலவரப்படி சூறாவளி நிலை மூன்றாவது வகையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்று தற்போது மணிக்கு 205 கிலோமீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, Onslow மற்றும் Exmouth பகுதிகளுக்கும், Mardie முதல் Ningaloo வரையிலான பகுதிகளுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்படும்.
அப்பகுதி மக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் வானிலை அறிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.