போலி வவுச்சர்களைப் பயன்படுத்தி வங்கியில் 21 மில்லியன் டாலர்களை ஏமாற்ற முயன்றதற்காக முன்னாள் NAB ஊழியர் ‘மோனிகா சிங்’ என்பவர் உட்பட 3 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
NAB இன் சிட்னி கிளையில் பணிபுரிந்த மோனிகா சிங் மீது ஒன்பது மோசடிகள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோனிகா சிங் முன்னாள் அடமானத் தரகர் ‘தாவேந்தர் தியோ’ மற்றும் IT ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் நாயுடு ஆகியோருடன் சேர்ந்து போலி வவுச்சர்களைப் பயன்படுத்தி பணத்தைத் திருட முயன்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மோனிகா சிங்கும் ஸ்ரீனிவாஸ் நாயுடுவும் இணைந்து மோசடியான வங்கி உத்தரவாதங்களைப் பயன்படுத்தி பல சொத்துக்களை தரகு பணமாக பெற்றுள்ளதாகவும் நீதிபதி குழு கண்டறிந்துள்ளது.
குறித்த சில அறிக்கைகள் தயாரிக்கப்படும் வரை மூவரும் தினமும் காவல்துறையிடம் தகவல் தெரிவிகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.