Breaking Newsதென் கொரியாவில் 176 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த விமானம்

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த விமானம்

-

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

புசானில் உள்ள கிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங்கை நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

176 பேரை ஏற்றிச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

169 பயணிகள் மற்றும் 7 விமான பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, பூசான் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 29 அன்று, தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவின் முவான் நகருக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் கொல்லப்பட்டனர். சமீப காலத்தில் தென் கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...