Delta Airlines வரும் டிசம்பர் முதல் பாதியில் இருந்து இரு நகரங்களுக்கு இடையே தனது விமான சேவையை தொடங்கும் என்ற அறிவிப்புடன் மெல்பேர்ணிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான விமானப் பாதைக்கு மிகவும் போட்டியான சூழல் உருவாகியுள்ளது.
இதனை மெல்பேர்ண் விமான நிலையம் இந்த மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பரில் இருந்து, டெல்டா ஏர் லைன்ஸ் வாரத்திற்கு மூன்று முறை மெல்பேர்ணுக்கு பறக்கும்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் Airbus A350 விமானத்தைப் பயன்படுத்தி விமான சேவைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விக்டோரியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என விக்டோரியா சுற்றுலாத்துறை அமைச்சர் Steve Timopoulos மேலும் வலியுறுத்தியுள்ளார்.