பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சௌத்ரி என்கிற கே.பி.சௌத்ரி கடந்த 3ம் திகதி தற்கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 7 மாதங்களாக வடக்கு கோவாவின் சியோலிம் பகுதியில் வாடகை குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.