ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான கீரை வகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதில் E coli எனும் பாக்டீரியா அடையாளம் காணப்பட்டுள்ளதே முக்கிய காரணமாகும்.
அதன்படி, Coles – Woolworths – Aldi மற்றும் IGA பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான பொதி செய்யப்பட்ட கீரைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நிலைமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எந்த பல்பொருள் அங்காடிகளையும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 9 ஆம் திகதி காலாவதி திகதி கொண்ட சுமார் 50 வகையான கீரை பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
Salad பொருட்களை வாங்கும் போது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய-நியூசிலாந்து உணவு தரநிலைகள் நிறுவனம் அறிவுறுத்துகிறது.





