விக்டோரியா காவல்துறையினர் $10,000க்கும் அதிகமான மதிப்புள்ள போலி நாணயங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் Facebook Marketplace மூலம் Pokemon அட்டைகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், $1,500 மதிப்புள்ள Pokemon அட்டைகளை விற்ற ஒருவர், தனக்குக் கிடைத்த பணம் போலியானது என்று புகார் அளித்தார்.
விக்டோரியா காவல்துறையினர் சந்தேக நபர் மேலும் $2,700 மதிப்புள்ள Pokemon அட்டைகளை வாங்க முயன்றபோது கைது செய்ய முடிந்தது.
இந்த மோசடி Lovedeep Dhillon என்ற பெயரில் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் போலிப் பணத்தை அச்சிடுவதில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.