Newsஅமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் சவுதி சென்றார். அங்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் நேற்று கட்டார் சென்றார். அவர் கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்ய கட்டார் ஒப்பந்தம் செய்தது. கட்டார் விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் 160 விமானங்களை அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

ட்ரம்ப் , தமீம் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...