Breaking Newsகாசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

-

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, Madleen நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன.

அது தொடர்பாக காணொளி ஒன்றில் பேசிய Greta Thunberg, “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கிரேட்டா தன்பர்க்கின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “Greta Thunberg தற்போது இஸ்ரேல் வழியாக பாதுகாப்பாகவும் நல்ல மனநிலையுடனும் சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறியது.

Madleen கப்பலில் Rima Hassan, Reva Viard, Baptiste Andre, Pascal Raymond Maurieras, Yanis Mahamdi (அனைவரும் பிரான்சைச் சேர்ந்தவர்கள்), Sergio Toribio (ஸ்பெயின்), Mark Van Rennes (டென்மார்க்), Hussain Suaib Ordu (துருக்கி), Jasmine Agar (ஜெர்மனி) மற்றும் Diego Avila (பிரேசில்) ஆகிய மற்ற சமூக செயற்பாட்டாளர்களும் இருந்தனர்.

ஜூன் 1-ஆம் திகதிMadleen கப்பல் காசாவில் உணவுப் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தாலியில் இருந்து புறப்பட்டது. காசாவை ஐக்கிய நாடுகள் சபை “பூமியில் மிகவும் பசியுள்ள இடம்” என்று அழைத்தது.

21 மாத போருக்குப் பிறகு, காசாவில் உள்ள முழு மக்களும் பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்தது. சர்வதேச கடல் பகுதியில் Madleen கப்பல் இடைமறிக்கப்பட்டதை துருக்கி “கொடூரமான தாக்குதல்” என்று கண்டித்தது. ஈரானும் இதை “இது ஒரு வகையான கடற்கொள்ளையர் செயல்” என்று கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...