Breaking Newsபெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் - ஆஸ்திரேலியர் கைது

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் – ஆஸ்திரேலியர் கைது

-

இந்தோனேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒரு ஆஸ்திரேலியர் உட்பட 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் அரை டன்னுக்கும் அதிகமான பல்வேறு போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 21 பெண்கள் மற்றும் ஏழு வெளிநாட்டினர் அடங்குவர்.

அவர்களில் ஒரு ஆஸ்திரேலியர், ஒரு அமெரிக்கர், இரண்டு Kazakh நாட்டினர், இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு இந்தியர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும், 21 பெண்கள் உட்பட 36 சந்தேக நபர்களும் கைவிலங்குகள் மற்றும் ஆரஞ்சு நிற சிறைச் சீருடைகளை அணிந்தபடி செய்தியாளர்கள் முன் அணிவகுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த மாத தொடக்கத்தில், இந்தோனேசியாவிற்கு கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் கோகைன் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரிட்டிஷ் பிரஜைகள் மீது பாலி தீவில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நாட்டின் கடுமையான போதைப்பொருள் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...