டொனால்ட் டிரம்பின் Big Beautiful சட்டம் அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, Gold Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம், எல்லை பாதுகாப்பு, தடுப்பு மையங்கள் மற்றும் இராணுவ செலவினங்களுக்காக அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளைக் குறைக்கும் விதிமுறைகளும், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி திட்டங்களுக்கான வரிக் குறைப்புகளும் அடங்கும்.
இது மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு சுகாதார மற்றும் உணவு உதவிகளைத் தடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் கிடைத்தன.
இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப் நாளை Big Beautiful சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.