காசாவில் நடக்கும் போருக்கு எதிராக மெல்பேர்ண் நகரம் முழுவதும் ஒரு பெரிய மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 300 உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் Flinders தெரு மற்றும் Swanston தெருவில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
அமைதியை மீறி சாலைகளை மறித்ததற்காக ஐந்து போராட்டக்காரர்களை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தை பாலஸ்தீன மாணவர் அமைப்பு மற்றும் தேசிய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தன.
இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதை ஆஸ்திரேலியா நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை ஆகும்.






