லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்தும் அதிரடியாக நடைபெறுகிறது.
இத்திரைப்படத்தின் விசேட காட்சிகாக ஆஸ்திரேலியாவில் 25,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகின.
ரசிகர்கள் காலையிலிருந்து திரையரங்குகளின் வாசலில் வரிசையில் டிக்கெட் முன்பதிவுக்காக காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 1 மணி நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல, கர்நாடகாவிலும் டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை ஆரம்பமானது. அதில் கூலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கி 37 நிமிடங்களில் 10,000க்கும் மேல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத்திரைப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.