Cinemaடிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த கூலி திரைப்படம்

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த கூலி திரைப்படம்

-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இந்தநிலையில், திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்தும் அதிரடியாக நடைபெறுகிறது. 

இத்திரைப்படத்தின் விசேட காட்சிகாக ஆஸ்திரேலியாவில் 25,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதேபோன்று, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் டிக்கெட் முன்பதிவு நேற்று ஆரம்பமாகின. 

ரசிகர்கள் காலையிலிருந்து திரையரங்குகளின் வாசலில் வரிசையில் டிக்கெட் முன்பதிவுக்காக காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, 1 மணி நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதேபோல, கர்நாடகாவிலும் டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை ஆரம்பமானது. அதில் கூலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

டிக்கெட் முன்பதிவு தொடங்கி 37 நிமிடங்களில் 10,000க்கும் மேல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்தத்திரைப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...