காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் கிடைத்து வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் இறந்துகொண்டேயுள்ளனர்.
இன்று மட்டும் இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உணவு மையங்களை நோக்கிச் சென்றவர்கள். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உணவின்றி இறந்துள்ளனர்.
இதேவேளை காஸாவுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க 20.1 மில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
மேலும் பல்வேறு நாடுகள் காஸாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.