இந்திய நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில், அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரி, பதிப்புரிமை பெற்றுள்ள AP International நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
சந்திரமுகி படக் காட்சிகளை நீக்கக் கோரியும், 5 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) இழப்பீடு கோரியும் ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டது.
மேலும், ஆவணப் படத்தின் மூலம் கிடைத்த இலாபக் கணக்கைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிடப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் Netflix நிறுவனம், 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒக்டோபர் 6 ஆம் திகதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நயன்தாரா ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.