கோல்ட் கோஸ்ட்டின் சில பகுதிகளில் ஒரு பள்ளியில் தட்டம்மை நோய் பதிவாகியதை அடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை Clover Hill County பள்ளியின் மாணவர் ஒருவர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அன்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை அந்த மாணவர் பள்ளியில் இருந்தார். மேலும் மதியம் Tulipwood Drive (Bonogin) Austinville-இற்கும், Clover Hill-இல் இருந்து Austinville-இற்கும் பள்ளி பேருந்தில் பயணம் செய்தார்.
எனவே, அன்றைய தினம் அந்த சாலைகளில் பயணித்தவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அறிவிப்பு எச்சரிக்கிறது.
குயின்ஸ்லாந்து சுகாதாரம், மக்கள் தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து மூன்று வாரங்கள் வரை அறிகுறிகளைக் கண்காணிக்கவும், தங்களுக்கு நோய் பாதித்திருப்பதாக சந்தேகித்தால் 13HEALTH (13 43 25 84) என்ற எண்ணை அழைத்து ஆலோசனை பெறவும் கேட்டுக்கொள்கிறது.
தட்டம்மை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், சோம்பல், மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவை அடங்கும்.
வைரஸ் முன்னேறும்போது, முகத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவும் சிவப்பு புள்ளிகளுடன் கூடிய சொறி ஏற்படுகிறது.
தொற்று ஏற்பட்ட ஏழு முதல் 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர், ஆனால் அவை தொடங்க மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.
தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அம்மை நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று அவர்கள் மேலும் கூறினர்.