மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவி ஒருவரின் கண்ணில் Magpie தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மாணவி பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை சந்தித்துள்ளார்.
இந்த விபத்தின் காரணமாக, 18 மாத காலப்பகுதியில் அவரது முகத்தில் சுமார் 8 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பள்ளி முடிந்து தனது சகோதரனை சந்திக்க தனது மகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பறவை தாக்கியதாக சிறுமியின் தாய் தெரிவித்தார்.
விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், சிறுமி அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பிறகு சுமார் 8 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட போதிலும், சிறுமியின் கண் இன்னும் குணமடையவில்லை என்று சிறுமியின் தாய் கூறினார்.





