டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன் ஹில் நேற்று இலங்கைக்கு சென்றார்.
இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயிர்காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்கும் UNFPA ஊழியர்களையும் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் சுகாதார சேவைகள் குறித்து அமைச்சர் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுகாதார சேவை ஆஸ்திரேலியா வழங்கும் 3.5 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிப் பொதியின் ஒரு பகுதியாகும், இது அவசரத் தேவைகளுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படும் என்று UNFPA இலங்கை ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியா இலங்கை மக்களுடன் தொடர்ந்து துணை நிற்கும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை அமைச்சரின் வருகை எடுத்துக்காட்டும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.





