News4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

-

நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோலாவை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற குறித்த குடும்பத்தினர், அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்கள் பிலோலாவுக்குத் திரும்புவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்த குடும்பம் வீடு திரும்புவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் என்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.

மார்ச் 2018 இல் பிலோலாவிலிருந்து இக்குடும்பம் அழைத்துச் செல்லப்பட்டு, குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டது.

அவர்களைத் மீண்டும் பிலோலாவுக்கு அழைத்துவருவதற்காக உள்ளூர் மக்கள்1,500 நாட்களுக்கும் மேலாக பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

குடும்பத்திற்கு ஆதரவாக ஹோம் டு பிலோ பிரசாரகர் ஏஞ்சலா ஃபிரடெரிக்கின் Change.org மனுவில் கிட்டத்தட்ட 600,000 பேர் கையெழுத்திட்டனர்.

மேலும் 53,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், 2019 இல், இக்குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் கூட்டு முயற்சியை நீதிமன்றங்கள் தடுத்தன.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இடைக்கால உள்விவகார அமைச்சர், ஜிம் சால்மர்ஸ், இடம்பெயர்தல் சட்டத்தின் 195A பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தை மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து உக்ரைனுக்கு மற்றொரு $100 மில்லியன் இராணுவ உதவிப் பொதி

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைனுக்கு ஒரு குறுகிய பயணத்தின் போது...

அதிக வரி விகிதம் கொண்ட வளர்ந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வரி உயர்வால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வரி விதிக்கும்...

பிரசவத்திற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த மருத்துவமனைகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் சராசரி டெலிவரிக்கு குறைந்தபட்சம் $726 செலவாகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரசவத்திற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் சிறந்ததா என 1000 பெண்களிடம் ஃபைண்டர்...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

சுட்டுக் கொல்லப்பட்ட Tiktok நட்சத்திரம்

ஈராக் சமூக ஊடக ஆர்வலரான ஓம் ஃபஹத் என்ற இளம் பெண் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு...