Sportsமும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

-

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர் பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் திகதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர். 

ஏப்ரல் 24-ம் திகதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். 

இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

ஆஸ்திரேலியர்களின் வீடுகள் பற்றிய புதிய அறிக்கை

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்களுக்குத் தேவையானதை விடப் பெரிய வீடுகளில் வசிப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியர்களில் 60% பேர் தனியாகவோ அல்லது வேறொரு நபருடனோ வசிப்பதாக ஒரு...

அடிலெய்டு மக்கள் இனி AI குரல் அமைப்பு மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள மக்கள் இப்போது AI மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர். அடிலெய்டில் உள்ள Amalfi Pizzeria இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள்...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லாரி ஓட்டுநர்கள் பலி

பிரிஸ்பேர்ணின் வடமேற்கே எரிபொருள் tanker லாரிக்கும், transporter-இற்கும் இடையே ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர். பிரிஸ்பேர்ணில் இருந்து சுமார் 174 கி.மீ தொலைவில்...