Newsகொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

கொரோனா தோற்றம் குறித்து அனைத்து நாடுகளும் தெரிந்த விபரங்களை வெளியிட வேண்டும்!

-

உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. 

சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரசானது தோற்றுவிக்கப்பட்டுள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. 

அமெரிக்காவின் எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, சமீபத்தில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் பற்றி எங்களது அமைப்பு நடத்திய புலனாய்வில், அது உகான் நகரில் உள்ள ஆற்றல்மிக்க ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறினார். 

இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 

இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தெரிவிக்கையில்,

கொரோனா வைரசின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்து கொள்வது அவசியம் ஆகிறது என டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார். 

நாம் பழி போடும் விசயங்களை விட்டு, விட்டு இந்த பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். 

அதனால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நோய் தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுகளை தடுக்க முடிவதுடன், நாம் அதற்கு தயாராகவும், அவற்றை எதிர்கொள்ளவும் முடியும் என கூறியுள்ளார். 

கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். 

சமீபத்தில் சீனாவின் உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாகவுள்ளது என கேட்டு கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியர்கள் மருத்துவ கஞ்சாவுடன் வாகனம் ஓட்ட அனுமதி

விக்டோரியா மருத்துவ கஞ்சா தொடர்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மருத்துவ கஞ்சா பயன்படுத்துபவர்களாக இருந்தால், போதைப்பொருளுக்கு நேர்மறை சோதனை செய்யும் ஓட்டுநர்களை தானாகவே தகுதி...

ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்கு சேமிப்பு பற்றி நடத்தப்பட்ட ஆய்வு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தான்

பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து,...

Elon Musk-இன் Tesla-ஐ பின் தள்ளிய BYD

சீன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் BYD, இந்த ஆண்டு காலாண்டு வருவாய் உயர்ந்து, எலோன் மஸ்க்கின் Tesla-வை முதன்முறையாக பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதன்...

குப்பை வண்டியில் செல்லும் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நாளில், வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குப்பை லாரியில் எப்படி செல்கிறார் என்பதை காட்டும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில்...

3.4 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர வீடு வாங்கியுள்ள ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் 3.4 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக...