10 வது வட்டி விகித உயர்வை அடுத்து அதிக எண்ணிக்கையிலான ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய அடமானக் கடன் தவணைகளை மறுசீரமைக்க வேலை செய்வதாக சமீபத்திய தரவு வெளிப்படுத்துகிறது.
Finder நடத்திய சர்வேயில், வரும் ஜூலை மாதத்திற்குள் அடமானக் கடன் குறித்து கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
மாதாந்திர பிரீமியம் தொகையின் மதிப்பை குறைத்து பிரீமியம் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு என தெரியவந்துள்ளது.
புள்ளியியல் அலுவலக தரவு அறிக்கைகளின்படி, கடந்த 12 மாதங்களில் கிட்டத்தட்ட 17.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டுக் கடன்கள் திருத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து சுமார் 05 இலட்சம் டொலர் வீட்டுக் கடனைப் பெற்ற ஒருவரின் மாதாந்த பிரீமியம் 1,051 டொலர்களால் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.