Newsஉக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 6 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 6 பேர் பலி!

-

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகின்றது.

இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின.

11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

வடக்கில் கார்கிவ் நகரம் தொடங்கி தெற்கே ஒடேசா, மேற்கில் ஜைட்டோமிர் நகரம் வரையிலும் ஏவுகணைகள் மழையாகப் பொழிந்தன.

கார்கிவிலும், ஒடேசாவிலும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பல பகுதிகளில் மின்கட்டமைப்புகள் பெருத்த சேதத்துக்கு ஆளானதால் அவை இருளில் மூழ்கின.

தலைநகர் கீவிலும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சமீப காலத்தில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் இதுதான் என்று உக்ரைன் தெரிவித்தது.

அதே நேரத்தில் ரஷ்யாவின் 34 ஏவுகணைகளையும், ஈரான் தயாரிப்பான ஷாகித் டிரோன்கள் 4-ஐயும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்தது.

மேற்கு உக்ரைனில் லிவிவ் நகரில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்து தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை அந்த பிராந்தியத்தின் கவர்னர் மாக்சிம் கோஜிட்ஸ்கி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார். டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ஏவுகணை, டிரோன்தாக்குதலில் ஒருவர் பலியானார்.

5 பேர் படுகாயம் அடைந்தனர். கீவ் நகரில் தொடர்ந்து வான்தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் விடிய விடிய ஒலித்ததாக தெரிய வந்துள்ளது.

அங்கு ஏவுகணை மற்றும் வெடிக்கும் டிரோன்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் பல வழிமறித்துத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு மின்சக்தி கட்டமைப்புகள் பாதிப்புக்குள்ளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நன்றி தமிழன்

Latest news

மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் ஒரு பிரபலமான இனிப்பான்

சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் Erythritol, மூளைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Erythritol சர்க்கரையை விட 70% இனிப்பானது மற்றும் மிகக் குறைந்த கலோரி...

ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி 

கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய பெண்கள் குழுவிற்கு அனுமதி...

பியர் விலையை திருத்தி அமைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு

பிரதமர் அந்தோணி அல்பானீஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பியர் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த முடிவு மதுபான...

வெற்றிகரமாக உள்ள RBA கணிப்புகள் – Michelle Bullock

கடந்த மாதம் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக உயர்ந்த போதிலும், மே மாதத்திலிருந்து RBA இன் கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்...

மெல்பேர்ணில் ஒரு தாயின் போராட்டத்திற்கு பிறகு நடந்த குழந்தையின் அறுவை சிகிச்சை

ஒரு தாயின் போராட்டத்திற்குப் பிறகு, ராயல் மெல்பேர்ண் குழந்தைகள் மருத்துவமனையில் 18 மாதக் குழந்தை அறுவை சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்டிகோவின் தாய் கரோலின்...

மனிதாபிமான பேரழிவாக மாறிவிட்ட காசா – பிரதமர் அல்பானீஸ்

காசா பகுதி இப்போது ஒரு மனிதாபிமான பேரழிவாக மாறிவிட்டது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இஸ்ரேல் உதவி வழங்க மறுப்பதும், தண்ணீர் மற்றும் உணவைத்...