Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நீடித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல விரிவுரைகள் ரத்து செய்யப்பட வேண்டியதாகவோ அல்லது வேறு நேரங்களில் திட்டமிடப்பட்டதாகவோ கூறப்படுகிறது.
ஊதிய உயர்வு மற்றும் சேவை தரத்தை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2.2 சதவீத வருடாந்திர சம்பள உயர்வை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் தற்போதைய பணவீக்க விகிதமான 7.8 சதவீதத்திற்கு ஏற்ப அது போதாது எனவும் Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் Curtin பல்கலைக்கழகம் 313 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது.
எனவே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எந்த தடையும் இல்லை என ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.