Sports2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியும் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கிண்ண கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

கடைசியாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. 

மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது. 23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது. 

2026-ம் ஆண்டு ஜுன் 11-ம் திகதி முதல் ஜூலை 19-ம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை விட 16 நாடுகள் கூடுதலாக பங்கேற்கின்றன. 

கத்தார் உலக கிண்ணம் 32 அணிகள் பங்கேற்றன. உலக கிண்ணத்தில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலகக்கிண்ணத்தை விட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கிண்ணத்தில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...

தனது உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் மேலும் பணக்காரர் ஆனார். அதாவது மஸ்க்கின் நிகர மதிப்பு 347.8 பில்லியன் டாலர்கள் ஆகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி,...

திரும்ப அழைக்கப்படும் பிரபல DVD Player

ஆஸ்திரேலியாவில் உள்ள JB Hi-Fi ஸ்டோர்களில் விற்கப்படும் அனைத்து Ayonz Dual Screen Portable DVD Playersஐ மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்...

திரும்ப அழைக்கப்படும் பிரபல DVD Player

ஆஸ்திரேலியாவில் உள்ள JB Hi-Fi ஸ்டோர்களில் விற்கப்படும் அனைத்து Ayonz Dual Screen Portable DVD Playersஐ மீண்டும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்...

குயின்ஸ்லாந்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (23) காலை திடீர் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனுக்கு வடக்கே உள்ள சவுத் மிஷன் கடற்கரையில்...