Newsஇம்ரான் கானின் மனு தள்ளுபடி – விரைந்து கைது செய்ய பொலிஸாருக்கு...

இம்ரான் கானின் மனு தள்ளுபடி – விரைந்து கைது செய்ய பொலிஸாருக்கு பணிப்பு

-

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை  நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது குறித்து இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சட்டம் என்பது அனைவருக்கும் சமம். எனவே, இம்ரானை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை (மாா்ச் 18) ஆஜா்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றபோது, வெளிநாட்டுத் தலைவா்கள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருட்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை நீதிமன்றம் கடந்த மாதம். 28-ஆம் திகதி பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 4-ஆவது முறையாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிா்த்தாா்.

பரிசுப் பொருள் முறைகேடு மட்டுமின்றி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், பரிசுப் பொருள் வழக்குக்காக வரும் 18-ஆம் திகதியும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குக்காக வரும் 21-ஆம் திகதியும் இம்ரான் கானை தங்கள் முன் பொலிஸார் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை கடந்த திங்கள்கிழமை பிறப்பித்தது.

எனினும், இம்ரானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் பொலிஸாருடன் இரு நாட்களாக கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...