Noticesவானவில் இன்னிசை விழா - 2023

வானவில் இன்னிசை விழா – 2023

-

அன்பான உறவுகளே!

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தாயகம் மற்றும் தமிழக கலைஞர்களோடு உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் வானவில் இன்னிசை விழா, சிட்னியில் ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

உள்ளூர்க் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இக்கலைநிகழ்வில், இசையால் நிரப்பும் திரையிசைப் பாடல்களையும், தாயக வாசம் சுமந்த ஈழத்துப் பாடல்களையும் இணைத்து வழங்கும் இசைநிகழ்வு

நிகழ்விடம்: Kingswood High School, 131 Bringelly Rd, Kingswood NSW 2747
காலம்: 01-04-2023 Saturday 6pm – 9pm
தொடர்பு: 0401 842 780, 0401 289 214, 0424 757 814, 0424 157 366, 0430 050 051

இவ்இன்னிசை நிகழ்வில், இளையோர்கள் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்வுகளும், பார்வையாளர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...