புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகாவில், புதிய பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவில் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் தென்படுவதை நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு லிட்டர் பனியில், சராசரியாக 29 நெகிழி துகள்கள் இருப்பதும், குளிர்பான பாட்டில்களிலும், ஆடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் எனவும் தெரியவந்துள்ளது.