Newsஇனி செத்து செத்து விளையாடலாம் – மரணத்தின் அனுபவத்தைத் தரும் புதிய...

இனி செத்து செத்து விளையாடலாம் – மரணத்தின் அனுபவத்தைத் தரும் புதிய தொழில்நுட்பம்

-

மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) என்ற புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது, மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது.

ஷான் கிளாட்வெல் என்பவர் பொஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற வேர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்ற உணர்வை கொடுக்கிறது.

இதில் ஈடுபடுபவர்களுக்கு இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையிலான மரணத்தின் போது ஏற்படும் உணர்வை கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் இதயத் துடிப்பைச் சரிபார்க்க, நீங்கள் ஒரு தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தைப் பெறும் நபர்கள் ஹார்ட் மொனிட்டருடன் இணைக்கப்படுவர் மேலும் அவர்கள் மிகவும் சங்கடமாக இருந்தால் எந்த நேரத்திலும் வெளியேறலாம். உங்கள் உதவிக்கு மருத்துவ ஊழியர்கள் இருப்பர்.

உடல்முழுவதும் கடந்து செல்லும் மின்சாரப் புயல் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது.

மெல்போர்னைச் சேர்ந்தவரும் கண்காட்சியாளருமான மார்கஸ் க்ரூக், வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தில் மரண அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார்.

இதுகுறித்து டிக்டொக்கில் வெளியிடபட்ட வீடியோவில், “மரணம் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது, இதனை உணர்ந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

அவர்கள் இதயத் துடிப்பு மொனிட்டரில் உங்கள் விரலை வைத்துவிட்டு, உங்கள் கையை உயர்த்தச் சொல்கிறார்கள். மரணம் நெருங்குவது குறித்த வேர்ச்சுவல் ரியாலிட்டி என்பது மரணத்திற்கு அருகில் செல்லும் அனுபவம் என கூறி உள்ளார்.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...